அரசு பெண் மருத்துவருக்கு எதிராக போராட்டம்.. களத்தில் இறங்கிய உறவினர்கள்

x

திருத்துறைப்பூண்டியில் அரசு மருத்துவமனை முன்பு மருத்துவர் அபிநயா பாபு என்பவரை கண்டித்து

சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பிச்சன்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சுந்தராம்பாள் என்ற பெண் கடும் வயிற்று வலியால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் அவரை தனது தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவர் அபிநயா சேர்த்து கர்ப்பப்பை கட்டியை அகற்றாமல் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சுந்தராம்பாளுக்கு வயிற்று வலி குறையாததால் அவருக்கு நிவாரண உதவியும் உரிய சிகிச்சையையும் அளிக்க கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்