நடந்துசென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் - கம்பி எண்ணும் ஆயுதப்படை காவலர்

x

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, சாலையில் நடந்து சென்ற பெண்ணிற்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.


மணிமாறன் என்பவர் விருதுநகர் ஆயுதப் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். காரியாபட்டி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த மணிமாறன், அந்த வழியாக சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


மேலும், அந்தப் பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், ஆயுதப்படை காவலர் மணிமாறனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்