"எங்கள் மீது எந்த தவறும் இல்லை" தனியார் பள்ளி நிர்வாகம் விளக்கம்
"எங்கள் மீது எந்த தவறும் இல்லை" தனியார் பள்ளி நிர்வாகம் விளக்கம்
தனியார் பள்ளி மீது மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டுகள் முன்வைத்த நிலையில் தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என பள்ளி நிர்வாகம்
விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த 6ஆம் தேதி தேதி மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி
ரங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில் பள்ளி விடுதிக்கு அனுமதி
பெறவில்லை என்றும், அசுத்தமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு பள்ளி நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. மாநில
குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அளித்த புகார் உண்மைக்கு மாறானது என்றும், உரிய உரிமம் பெற்ற பிறகே விடுதி நடத்தப்பட்டு வருவதாக பள்ளியின் விடுதி மேலாளர்
சாமுவேல் தெரிவித்தார்.