"உணவுக்கு வழியில்லை.." - காவல் நிலையத்தில் கண்ணீரோடு தொழிலாளர்கள் - போலீசாரின் அசாத்திய செயல்

x

நாமக்கல் வால் ராச பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வரும் நிலையில், அவரிடம் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்... தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்த சித்திக் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது குறித்து, அவர் கைது செய்யப்பட்ட நிலையில், உரிமையாளர் லோகநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததால், அவர் தலைமறைவாக உள்ளார்... இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1 மாத காலமாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வெப்படை காவல் நிலையத்தில் புகார் செய்ய வந்தனர்... உடனடி நடவடிக்கை எடுப்பதாக சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உறுதி அளித்ததுடன், தங்களுக்கு உணவுக்குக் கூட வழியில்லை... திரும்பி செல்ல பணமும் இல்லை என்று கலங்கிய தொழிலாளர்களுக்கு இரவு உணவைத் தானே வாங்கிக் கொடுத்ததுடன், ஊருக்கு செல்ல பேருந்து பயணச் சீட்டும் எடுத்துக் கொடுத்துள்ளார்... அவரது மனிதநேயமிக்க செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்