"குடிக்க கூட தண்ணீர் இல்லை.. சமைக்கவும் முடியல.." - அவதிப்படும் கிராம மக்கள்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.. இதனால்..
x

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மின்மோட்டாரை இயக்க முடியாததால், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழ்துளை கிணற்றில் பம்பிங் செய்து தண்ணீர் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்