மசாஜ் சென்டரில் பெண்ணை கட்டிப்போட்டு.. பயங்கரங்களை நிகழ்த்திய இளைஞர்.. நம்பி ஏமாந்ததால் ஆத்திரம்

x

மசாஜ் சென்டரில் பெண்ணை கட்டிப்போட்டு..

பயங்கரங்களை நிகழ்த்திய இளைஞர்.. நம்பி ஏமாந்ததால் ஆத்திரம்

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடகு கடை ஒன்றில், அனகாபுத்தூரை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் ஒருவர் கவரிங் நகையை அடகு வைக்கும் போது படிபட்டார்.

அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, விருகம்பாக்கம் ஆர்காடு சாலையில் உள்ள மசாஜ் சென்டரில், அங்கு பணிபுரியும் பெண் ஒருவரை, கடந்த 5 ஆம் தேதி கட்டிப் போட்டுவிட்டு நகைகளை திருடியது தெரிய வந்தது.

கஸ்டமராக அடிக்கடி சென்று ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து மசாஜ் செய்து வந்த‌தாகவும், உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி பணியாற்றும் பெண் ஏமாற்றியதால், கட்டிப்போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நகை கொள்ளை குறித்து மசாஜ் சென்டர் புகார் ஏதும் அளிக்காத நிலையில், அனுமதியில்லாமல் நடைபெற்றதால் போலீசார் எச்சரித்து அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்