மனதை ரணமாக்கிய சிலரின் வார்த்தைகள்.. தம்பதி சேர்ந்து எடுத்த விபரீத முடிவு

x

மனதை ரணமாக்கிய சிலரின் வார்த்தைகள்.. தம்பதி சேர்ந்து எடுத்த விபரீத முடிவு

மயிலாடுதுறை அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பழவேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்- பாக்கியலட்சுமி தம்பதி.

இவர்கள் தனியார் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்றதாக தெரிகிறது., அதனை வசூலிக்க சென்ற இரண்டு ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் தம்பதியை திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அவர்கள், வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனை பார்த்த உறவினர்கள், இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்