தந்தனா தான..! தானா தந்தனா தானா..! - கும்மியடித்து போராடிய பெண்கள்இரவிலும் நடந்த போராட்டம்

x

சென்னை மைலாப்பூர் மற்றும் ராயப்பேட்டையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின.


சென்னை மையிலாப்பூர் ரங்கச்சாரி சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் அப்துல் காதர் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த சிலிண்டர் ஸ்டவ் பழுதானதால், அதனை சரி செய்ய, ஹரிசங்கர் என்பவர் காலை வீட்டிற்கு வந்து பழுது பார்த்துள்ளார். அப்போது திடீரென தீ பரவியுள்ளது. சமையல் அறையில் தீப்பிடித்து உடனடியாக அடுத்தடுத்த அறைகளுக்கு தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்தது. தவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 3 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில், வீட்டின் உரிமையாளர் அப்துல்காதர், சிலிண்டர் பழுது பார்க்க வந்த ஹரி ஷங்கர் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல ராயப்பேட்டை பி.எம்.எஸ் தாஸ் தெருவில் உள்ள இரண்டு அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

Slug fire visual


Next Story

மேலும் செய்திகள்