நலம் விசாரிக்க சென்ற பெண்.. மூதாட்டிக்கு வினையாக அமைந்த குளிர்பானம்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

ராசிபுரத்தில் வீட்டில் தனியாக மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் தங்க நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்....
x

நலம் விசாரிக்க சென்ற பெண்.. மூதாட்டிக்கு வினையாக அமைந்த குளிர்பானம்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

ராசிபுரத்தில் வீட்டில் தனியாக மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் தங்க நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செம்மலை படையாட்சி தெரு பகுதியை சேர்ந்தவர் 80 வயதான பாப்பம்மாள். வீட்டில் தனியாக வசித்த வந்த இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் நலம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தான் வாங்கி வந்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மூதாட்டிக்கு கொடுத்துவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் சங்கிலியை பறித்துச்சென்றுள்ளார். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நகையை பறித்து சென்ற பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்