மருது சேனை அமைப்பின் பொருளாளர் வெட்டிக்கொலை...தலைவருக்கு வலது கையாக செயல்பட்டதால் பயங்கரம்....

x

விருதுநகர் - மாம்பழபேட்டை

மருது சேனை அமைப்பின் பொருளாளர் வெட்டிக்கொலை...தலைவருக்கு வலது கையாக செயல்பட்டதால் பயங்கரம்....

மகனின் கொலைக்கு பழிதீர்க்க நினைத்த தந்தை...

ஆள் கிடைக்காத விரக்தியில் அரசியல் புள்ளி கொலை...


பனமரத்து கீழ உக்காந்து பால் குடிச்சாலும் கள்ளு குடிக்கரானு தான் சொல்லுவாங்க...அதே மாதிரி தான் கொலையாளிகள் கூட சுத்திட்டு இருந்த ஒரே காரணத்துக்காக இங்க ஒரு அரசியல் பிரமுகர ஆபிஸ் புகுந்து வெட்டி கொன்னு இருக்காங்க...

விருதுநகர் மீன் மார்கெட் அருகே உள்ளது மாம்பழ பேட்டை.

எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த இந்த பகுதி அன்று மாலை பதற்றத்தில் அலறி கிடந்தது.

ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஆடிய வெறியாட்டத்தின் விளைவு தான் இந்த கோர காட்சி...

மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

கொல்லப்பட்டவர் விருதுநகர் மேல ரத வீதியை சேர்ந்த குமரவேல். 56 வயதான இவர் மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர். நகராட்சியின் ஒப்பந்ததாரராகவும் பணியாற்றி வந்திருக்கிறார்.

விருதுநகரின் முக்கிய புள்ளியாக வலம் வந்த குமரவேலை அவ்வளவு எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது.

சம்பவம் நடந்த அன்றும் அதே கெத்தோடு தான் குமரவேல் அவரது அலுவலகத்தில் வழக்கமான வேலைகளை கவனித்து வந்திருக்கிறார். கூடவே ராம்குமார் என்பவரும், குமரவேலின் மச்சினியும் இருந்திருக்கிறார்கள்.

ஐந்து மணியளவில் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் குமரவேலை குறிவைத்து வெட்டியிருக்கிறது. நடந்த தாக்குதலை ராம்குமாரும், குமரவேலின் மச்சினியும் தடுக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது.

உடனே அக்கம் பக்கத்தினர் குமரவேலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குமரவேல் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.

பொதுவாழ்கையில் இருப்பதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் சந்தேகப்பட்டதை போலவே, குமரவேலின் உயிரை பறித்தது 36 நாட்களுக்கு முன் நடந்த ஒரு படு கொலை.

19.6.2023 அன்று காலை காரைக்குடி பேருந்து நிறுத்தம் அருகே நடந்த வினித் என்பவரின் கொடூர கொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

நம்முடைய குற்றசரித்திரம் நிகழ்சியிலும் அந்த கொலையை பதிவு செய்திருந்தோம்.

கொல்லப்பட்ட வினித் மதுரை மைய்யிட்டான்பட்டியை சேர்ந்த ஞானசேகர் என்பவரது மகன். ஞானசேகர் அந்த பகுதியின் பெரும் புள்ளிகளில் ஒருவர். அதே ஊரை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவருக்கும் வினித்தின் தந்தைக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. ஆதிநாராயணன் மருது சேனை அமைப்பின் தலைவர்.

இந்த முன்விரோத பகையால், ஆதிநாராயணன் வினித்தை ஆட்களை ஏவி வெட்டி கொலை செய்திருக்கிறார்.

அந்த வழக்கு தொடர்பாக ஆதிநாராயணன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

வினித்தின் கொலை நடந்து 36 நாட்கள் முடிந்திருக்கிறது. உண்மையில் அந்த கொலைக்கும் குமரவேலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படியிருந்தும் குமரவேல் வெட்டி கொல்லப்பட்டதுக்கு காரணமாக சொல்லப்படுவது ரிவெஞ்ச்.

வினித்தின் கொலைக்கு பழிதீர்க்க அவரது ஆட்கள் கொலைவெறியோடு சுற்றி வந்திருக்கிறார்கள். ஆதிநாராயணனும் அவரது சகாக்களும் தற்போது சிறையில் இருப்பதால், அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.

வினித்தின் ஆட்களுக்குள் எரிந்து கொண்டிருந்த பகை வெறிக்கு உடனே ஒரு தீனி தேவைப்பட்டிருக்கிறது. அப்போது தான் குமரவேல் அவர்களின் நினைவுக்கு வந்திருக்கிறார். ஆதிநாராயணுக்கு எல்லாமாக இருந்தது குமரவேல். அவரது வலது கை...

மரணத்தின் வலியை ஆதிநாராயணுக்கு உணர்ந்த நினைத்த வினித்தின் ஆட்கள் குமரவேலை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு குமரவேல் கொலையின் மர்மம் விலகும்.


Next Story

மேலும் செய்திகள்