தெய்வம் ரூபத்தில் வந்த ஆசிரியர்கள்..கண்கலங்கிய மாணவர்கள்.. இந்த மனசு தான் சார் கடவுள்

x

சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி அரசு உதவி பெறும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் மழையால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என, தலைமை ஆசிரியர் மனோகரன் அறிவுறுத்தல் அடிப்படையில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சூளைமேடு, எழும்பூர், எம்.எம்.டி.ஏ உள்ளிட்ட பகுதிகளில் உடைமைகளை பல குடும்பத்தினர் இழந்தது தெரிய வந்தது. பல மாணவர்கள் பாட புத்தகங்களையும் இழந்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்களின் குடும்பத்தினர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும் நிதி பங்களிப்புடன், அரிசி பருப்பு, டீ தூள், லுங்கி பெட் சீட் உள்ளிட்ட பலவகையான பொருட்களை பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்