செஸ் ஒலிம்பியாட் அரங்கையே அதகளம் செய்யும் தமிழ் பையன்.. எதிர் அணியை மிரட்டும் சார்மிங் பாய் யார்?

குகேஷ்... மாமல்லபுரத்தில் நடந்துவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைவரையும் ஈர்க்கும் சென்னை பையன்....
x

குகேஷ்... மாமல்லபுரத்தில் நடந்துவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைவரையும் ஈர்க்கும் சென்னை பையன்.... ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியிருந்தாலும் அதிகம் கவனத்தை ஈர்த்தவர் குகேஷ்.

களம் கண்ட 6 சுற்றிலும் தோல்வியை சந்திக்காத அவருடைய வியூக பயணம் எதிராளிகளை மிரட்டி வருகிறது. செஸ் தரவரிசையில் 2,700 புள்ளிகளை குறைந்த வயதில் குவித்தவர் குகேஷ். 2009 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த குகேஷ், 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற சாதனையை படைத்தவர்.

உள்ளூர் மற்றும் உலக செஸ் அரங்கங்களில் பதக்கம், பட்டங்கள் பல வென்றவர். இப்போது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றியை மட்டுமே ருசித்துவரும் அவர், 5- வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலகின் நம்பர் 2 வீரரான அலெக்ஸி ஷிரோவை மடக்கினார்.

இதுவே 6-வது சுற்றில் அர்மேனியாவின் கேப்ரியல் சர்ஜிசியனை தோற்கடித்து அரங்கை அதகளம் செய்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற 30 வீரர்களில் தொடர் வெற்றி... என்ற சாதனையை படைத்த ஒரே வீரரும் தமிழகத்தை சேர்ந்த குகேஷ்தான்.


Next Story

மேலும் செய்திகள்