மெரினாவில் விளையாடிய மாணவர்கள்.. கடலுக்குள் இழுத்து சென்ற ராட்சத அலை -அடுத்த பயங்கரம்

சென்னை, மெரினா கடற்கரையில் கடல் அலையில் சிக்கிய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்...
x

மெரினாவில் விளையாடிய மாணவர்கள்.. கடலுக்குள் இழுத்து சென்ற ராட்சத அலை -அடுத்த பயங்கரம்

சென்னை, மெரினா கடற்கரையில் கடல் அலையில் சிக்கிய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மெரினா கடற்கரையில் தனியார் கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள் கடல் அலையில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி ஹரின் என்ற மாணவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். அப்போது கரை திரும்பிக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்