ஊராட்சி தலைவி போட்ட ஸ்கெட்ச்.. ஆதாரத்தை அழிக்கும்போது ஊழல் பெருச்சாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நள்ளிரவு நேரத்தில் ஊராட்சி அலுவலகத்தில் நுழைந்து முக்கிய ஆவணங்களை அழிக்க முயன்ற ஊராட்சி செயலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்தில் ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, ராமநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டியராஜன், ஊராட்சிமன்ற செயலர் அண்ணாமலை, முன்னாள் தனி அலுவலர் கேசவன் ஆகியோர் மீது குற்றம்சாட்டிருந்தார். இந்நிலையில், நள்ளிரவு அலுவலகத்துக்குள் நுழைந்த ஊராட்சி செயலர் அண்ணாமலை, முறைகேடு தொடர்புடைய ஆவணங்களை அழித்துக் கொண்டிருந்தார். அப்போது, தற்செயலாக ஊராட்சி மன்றத் தலைவர் தேவி மாங்குடி, தனது செல்போனில் உள்ள சிசிடிவி செயலி மூலம் அலுவலகத்தை பார்த்ததில், அண்ணாமலை ஆவணங்களை அழித்துக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரித்தபோது அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்