போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி

x

போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி

திருட்டு கும்பலைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புதுச்சத்திரம் அருகே

பெரியக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்களை ஒரு கும்பல் திருடிக் கொண்டிருந்தது. இதையறிந்து அங்கு சென்ற

போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசி அந்த கும்பல் தப்பித்து சென்றது. இதுதொடர்பாக ரவுடி கோபி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ரவுடி

கோபியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி கோபியை குண்டர் தடுப்பு சட்டத்தில்

கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்