குழந்தையை கட்டி வைத்த தனியார் பள்ளி... அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.! சென்னையில் அரங்கேறிய கொடூரம்

x

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சையது நவாஸ் என்பவரின் 3 வயது மகனுக்கு பேச்சுத்திறன் குறைபாடு உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டி, எழும்பூரில் உள்ள தனியார் பேச்சு பயிற்சி பள்ளியில் தனது குழந்தையை சையது நவாஸ் சேர்த்துள்ளார். பயிற்சி பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்து வருவதற்காக, தாத்தா அம்ஜத்கான் என்பவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு குழந்தையின் இரு கைகளையும் கயிற்றால் கட்டி வைத்திருந்ததைக் கண்டு முதியவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அங்கிருந்த பேச்சு பயிற்சி ஆசிரியர் ஞானசேகர் என்பவரிடம் முதியவர் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனியார் பேச்சு பயிற்சி பள்ளி உரிமையாளர் வின்சென்ட், கிளை மேலாளர் விசாலாட்சி, வகுப்பு ஆசிரியர் ஞானசேகர் ஆகியோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்