பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து.. எங்கு பார்த்தாலும் ரத்தம்! விருதுநகர் அருகே பரபரப்பு சம்பவம்

x

அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு, தனியார் பேருந்து மானாமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி பகுதியில் பேருந்து சென்ற போது, முன்னால் சென்ற சிமெண்ட் லாரியை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்