போலீசுக்கு துப்பு சொன்னவரை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கொடூரம்

x

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, போலீஸ் இன்பார்மராக இருந்த நபரை, மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குலத்தை சேர்ந்த மணிகண்டன், அந்தப் பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவம் குறித்து போலீசாருக்கு மறைமுகமாக தகவல் சொல்லி வந்துள்ளார். இதனால் மணிகண்டனுக்கும், பாதிக்கப்பட்ட சிலருக்கும் பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வயல் பகுதிக்கு சென்ற மணிகண்டனை, மர்மநபர்கள் சரமாரியாக தலைப் பகுதியில் வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தப்பியோடிய கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்