நிறுத்தியும் நிற்காத கார்.. மடக்கி பிடித்ததும்போலீசையே ஆபாசமாக திட்டிய நபர்.. தீயாய் பரவும் வீடியோ
சென்னை கோயம்பேடு பகுதியில், போலீசார் தடுத்து நிறுத்தியும் நிற்காமல் வேகமாக சென்ற காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் மதுபோதையில் காரை ஓட்டிச்சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாததில் ஈடுபட்ட அந்த போதை நபர், போலீசாரை ஆபாசமாக வசைபாடினார். அந்த நபரின் வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அபராதம் விதித்த நிலையில், இதுதொடர்பான காட்சிகள் வைரலாகி உள்ளன.
Next Story