பெட்ரோல் பங்க்கில் Phone -Pe ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி ஓனருக்கு விபூதி அடித்த மேனேஜர்

x

கன்னியாகுமரி அருகே பெட்ரோல் பங்கின் போன்-பே ஸ்கேனர் ஸ்டீக்கரில், தனது வங்கி கணக்கின் ஸ்கேனர் ஸ்டீக்கரை ஒட்டி பங்க் மேலாளர் 23 லட்ச ரூபாய் திருடிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் லாசர். பத்மநாபபுரம் அரண்மனை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இவர், பங்கில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளிடம் போன்-பே மூலமாக பணம் வசூல் செய்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தனது வங்கி கணக்கை ஆய்வு செய்த லாசர், வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு வருடமாக செலுத்திய பணம் ஏதும் தனது கணக்கில் வரவாகாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். விசாரணையில், பங்கில் மேலாளராக பணிபுரிந்த வந்த நிஜில் பிரேம்சன் என்பவர், தனது வங்கி கணக்கு போன்-பே ஸ்கேனர் ஸ்டிக்கருக்கு பதிலாக, அவரது வங்கி கணக்கு ஸ்டிக்கரை ஒட்டி இருந்ததும், தினமும் போன்-பே மூலம் வரவாக பணத்திற்கும் போலி ரசீது காண்பித்து மோசடி செய்ததையும் கண்டுபிடித்துள்ளார். இதன்படி, கடந்த ஒரு வருடம் மட்டும் சுமார் 23 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் வரை நிஜில் பிரேம்சன் திருடியது தெரியவர, லாசர் போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்