படுக இன மக்களின் முக்கிய பண்டிகை.. பாரம்பரிய உடையில் ஆடி, பாடி கோலாகலம் | Nilgiris

x

குன்னூரில் பாரம்பரியமிக்க ஹெத்தையம்மன் கோவில் பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஆடல், பாடலுடன் விமரிசையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன்

திருவிழா 14 கிராமங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, குன்னூர் அருகேயுள்ள காரக்கொரையில் அமைந்துள்ள ஹெத்தையம்மன் கோவிலுக்கு 8 கிராம மக்கள் பாரம்பரிய உடையணிந்து ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தனர். பின்பு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விரதம் இருந்த பக்தர்கள் பூகுண்டம் இறங்கினர்.

வரும் திங்கட்கிழமை ஹெத்தையம்மன் பண்டிகை கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்