தாசில்தாரை சுத்தவிட்ட மாபியா கும்பல்.. கூடவே இருந்து குழி பறித்த ஓட்டுநர் - "எதிரிக்கும் இந்த நிலமை வர கூடாது"

x

கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படை தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி, தப்பித்து வந்த அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தவரையும், அவருக்கு உதவிய ஜீப் ஓட்டுனரையும் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தாராக இருக்கும் இளங்கோ. அரிசி கடத்தல்காரர்களை பிடிக்க செல்லும் நேரங்களில், அவர்கள் தொடர்ந்து தப்பித்து வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தாசில்தார் இளங்கோ தனது ஜீப்பை சோதனையிட்டதில், அதில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அரிசிக் கடத்தலில் ஈடுபட்டு வரும் தேவராஜ் என்பவர், ஓட்டுநர் சுப்பிரமணியிடம் அடிக்கடி பேசி வந்ததும் தெரியவந்தது.

இருவரையும் பிடித்து விசாரித்தபோது, தேவராஜ் கொடுத்த ஜிபிஎஸ் கருவியை சுப்பிரமணி, தாசில்தாரின் ஜீப்பில் பொருத்தியது தெரியவந்தது. தாசில்தாரின் வாகனத்தை சென்போன் மூலம் கண்காணித்த தேவராஜ், தாசில்தார் வரும் வழியை தவிர்த்து மாற்றுப் பாதையில் தப்பித்துச் சென்றதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட பாமக நிர்வாகி பொன்னப்பனை தேடி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்