விவசாயிகளுக்கு குரல் கொடுத்த நீதிபதி..! பாராட்டிய ராமதாஸ்
உழவர்களுக்காக குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். பயிர்களை அழித்த என்எல்சிக்கு நீதிபதி தண்டபாணி கண்டனம் தெரிவித்ததை குறிப்பிட்டுள்ள அவர், பாமகவின் கொள்கை நிலைபாட்டை நீதியரசர் அப்படியே வழிமொழிந்துள்ளதாக கூறியுள்ளார். நீதிபதியின் மனதை தைத்த நிகழ்வுகள், அதிகாரத்தில் இருப்பவர்களின் இதயங்களையும் தொட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பயிர்களை அழிப்பதும் நிலத்தை பறிப்பதும் பாவம் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் என்றும், அதற்கானத் திறனை பகுத்தறிவு வழங்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Next Story