அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்..நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. | ED Raid

x

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை பெறுவதற்காக, கைதான அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அங்கிட் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியதோடு, வரும் 14ம் தேதி அன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்