கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்.. 3 பேரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

x

கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்.. 3 பேரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொள்ளாச்சி

குமரன் நகரில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கார் கண்ணாடியை உடைத்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

அமைப்பைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா, முகமது ரபீக், ரமீஸ் ராஜா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 4 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்