4 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.. 27 பேர் குற்றவாளிகள்.. இன்னும் சில மணி நேரத்தில்

2018ல் சிவகங்கை அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன?
x

4 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.. 27 பேர் குற்றவாளிகள்.. இன்னும் சில மணி நேரத்தில்..!


2018ல் சிவகங்கை அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன?

  • சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஊருக்குள் நுழைந்தது...

  • அப்போது கச்சநத்தம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் பலரையும் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த சண்முகநாதன், ஆறுமுகம், சந்திரசேகர் என 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்தனர்.

  • ஏற்கனவே சாதி தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த சூழலில் இந்த பயங்கரம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கச்சநத்தம் கிராமத்தில் நுழைந்த அந்த கும்பல் வீடுகளை சூறையாடிய காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

  • சாதி மோதல் காரணமாக நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • இதில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில் 31 பேர் மீதான வழக்கு விசாரணை சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

  • 4 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என சிவகங்கை நீதிமன்றம் கடந்த 1ஆம் தேதி தீர்ப்பளித்தது.. இதனிடையே அவர்களுக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

  • இதன் காரணமாக கச்சநத்தம், ஆவாரங்காடு உள்ளிட்ட கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்