விபரீத முடிவெடுத்த டான்ஸ் மாஸ்டர்மகன் உயிரை விட்ட அதே அறையில்தாய் செய்த பகீர் சம்பவம்

x

விபரீத முடிவெடுத்த டான்ஸ் மாஸ்டர்மகன் உயிரை விட்ட அதே அறையில்தாய் செய்த பகீர் சம்பவம்

வியாசர்பாடியில் தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், துக்கம் தாங்கமால் தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை வியாசர்பாடி கரி மேடு பகுதியை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் சுசில், இரவில் வீட்டிற்கு தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது தந்தைக்கும்

அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சுசில் தனது அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வராததால், அவரது தாயார் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சுசில்

தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனையடுத்து சுசிலின் தாயார், அக்கம் பக்கத்தினர் உதவியிடன் சுசிலின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை

பரிசோதித்த மருத்துவர்கள், சுசில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவரது தாயார், வீட்டிற்கு திரும்பி, சுசிலின் அறையிலையே தூக்கிட்டு தற்கொலை

செய்துகொண்டுள்ளார். அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்