சேற்றில் சிக்கிய நண்பனை காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்

x

சேற்றில் சிக்கிய நண்பனை காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வள்ளிகொல்லைகாடு

கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் வைரமுத்து மற்றும் வைரக்குமார். நண்பர்களான இருவரும், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கருங்குளம் நசுனி ஆற்றில் குளித்துக்

கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது, வைரக்குமார் சேற்றில் சிக்கி நீரில் மூழ்க, காப்பாற்ற சென்ற வைரமுத்துவும் ஆற்றில் மூழ்கினார். பின்னர், தகவலறிந்து வந்த

தீயணைப்பு வீரார்கள் நீண்ட நேரம் போராடி மாணவர்களின் உடலை மீட்டனர். இது தொடர்பாக வழக்குபதிந்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்