கூலிப்படையை ஏவி பழ வியாபாரியை கடத்திய தலைமைக் காவலர்

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை. கூலிப்படை ஏவி பழ வியாபாரி கடத்தல்/தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்.
x

சேலத்தில், கூலிப்படையை ஏவி, பழ வியாபாரியை கடத்திய தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பழ வியாபாரி அன்பரசன் என்பவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் ராம்மோகன் என்பவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். பணத்தை அன்பரசன் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த ராம் மோகன், கூலிப்படையை ஏவி, அன்பரசனை கடத்தியுள்ளார். புகாரின் பேரில், ராம்மோகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்