"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்..." - மேடையில் தமிழில் பேசிய ஆளுனர்
சென்னை கிண்டி ராஜ்பவனில் பகவான் மகாவீர் அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பு சார்பில் 26வது மகாவீர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மகாவீர் அறக்கட்டளை சார்பில் டெல்லியை தலைமை இடமாக கொண்ட தியான் அறக்கட்டளை, பழங்குடி சமூகத்தின் நண்பர்கள் உள்ளிட்ட 4 அறக்கட்டளைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மற்றும் விருதுகளை வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேடையில் பேசுகையில், வள்ளலாரின் பொன்மொழிகளை எடுத்துக்கூறியதுடன், உதவி செய்யும் மனப்பான்மை நம் கலாச்சாரத்திலேயே உள்ளது எனவும் பெருமிதம் தெரிவித்தார்..
Next Story
