ரூமுக்குள் இறந்து கிடந்த காதல் திருமணம் செய்த பெண்... அதிர்ந்து போன உறவினர்கள்

x

கவுண்டனூர் திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமியின் மகள் மோகனபிரியா, 2 ஆண்டுகளுக்கு முன்பு, கொலசனஅள்ளி கிராமத்தை சேர்ந்த தர்மதுரை என்பவரை, காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், தர்மதுரை வேலைக்குச் செல்லாமல், சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மோகனபிரியா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது மகளின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, மகேந்திரமங்கலம் காவல் துறையினர் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்