மோசடி வழக்கில் தொடர்புடைய நபர்களை வழிமறித்து தாக்கிய கும்பல் - விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

x

சேலம் மாவட்டம் காடையம்பட்டி அருகே 37 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடைய நபர்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய 8 பேர் கொண்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை கையொப்பமிட்டு திரும்பிய 3 பேர், காடையம்பட்டி அருகே சென்ற போது, அவர்களை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் கார் கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் பிடிக்க முயற்சித்த போது அக்கும்பல் தப்பியோடிய நிலையில், மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பணத்தகராறு காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்