இந்த வேலைக்கு இத்தனை லட்சம்.. ரூ.5.5 கோடிக்கு ஆப்படித்த கும்பல்..சூர்யா பட பாணியில் நடந்த சம்பவம்

x

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அருள் பாஸ்கர் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவிக்கு அரசு ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி, தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த நித்தியலட்சுமி, மெர்சி தீபிகா ஆகியோர் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுதுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, மெர்சி தீபிகா, தீபிகா லட்சுமி ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இருவரையும் கைது செய்து விசாரித்தபோது, 25 பேரிடம் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்தது அம்பலமானது. இதேபோல், மத்திய, மாநில அரசின் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த ரேணுகா, சியாமலிஸ்வரி மற்றும் இடைத்தரகராக இருந்த ஞானப்பிரகாசம் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நேர்காணல் நடத்தி, நான்கரை கோடி ரூபாய் வரை மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. இவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், இரு சக்கர வாகனம், போலி பணி நியமன ஆணைகள், போலி விண்ணப்பங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்