மகனை காக்க மனுவுடன் காத்திருந்த தந்தை.. சட்டென காரை நிறுத்திய முதல்வர்

x

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.


அந்த நிகழ்ச்சி முடிந்த பின், முதல்வரை சந்தித்து மனு கொடுக்க, திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தன் மகனுடன் காத்திருந்தார்.


பிரேம் குமாரின் 8 வயது மகன் பொன் குமரன், தோல் உரியும் நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளான்.


இதுவரை எந்த சிகிச்சை எடுத்தும் பயனளிக்கவில்லை என்பதால், முதல்வரை சந்தித்து மனு அளிக்க காத்திருந்தார்.


பின்னர் பின் அவிநாசியில் முதல்வரின் வாகனம் கடந்தபோது, முதல்வர் ஸ்டாலினிடம் பிரேம்குமார் மனுவை கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்