அரசு அதிகாரிக்கே பயம் காட்டிய... போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்... நடுரோட்டில் நடந்த சம்பவம்

x

அரசு அதிகாரிக்கே பயம் காட்டிய... போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்... நடுரோட்டில் நடந்த சம்பவம்

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறி நீர்வளத்துறை அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த அசோகன், தரமணியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் அலுவலகத்தில்

இருந்தபோது, அங்கு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி சிலர் வந்தனர். பணம் வாங்கியதாக புகார் வந்துள்ளதாக கூறி அசோகனை சைதாபேட்டை

வீட்டுக்கு சோதனைக்காக காரில் அழைத்துச் சென்றனர். பின்னர் அசோகனை நடுவழியில் இறக்கி விட்டு, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்திற்கு வர

வேண்டும் என்று இறக்கி விட்டனர். லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் விசாரித்தபோது, வந்தது போலியான அதிகாரிகள் என்று தெரியவந்தது. இதுகுறித்து தரமணி

போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி அதிகாரிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்