டோக்கன் வாங்க குவிந்த கூட்டம்.. பெயரை வாசித்ததும் கொந்தளித்த மக்கள்.. சென்னை அருகே பரபரப்பு

x

மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ள நிவாரண உதவி 6 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கப்படும் நிலையில், பூந்தமல்லியில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

பூந்தமல்லி நகராட்சி 5வது வார்டில் உள்ள ரேஷன் கடையில் ஆயிரத்து 600 ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் தற்போது ஆயிரத்து 325 பேருக்கு டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. உரிய ஏற்பாடுகள் செய்யப்படாததால் ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் டோக்கன் வாங்கக் குவிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது... அரசு ஊழியர்களை தாண்டி தனி நபர்கள் சிலர் டோக்கன் வழங்குவதற்கான பெயர்களை வாசித்ததால் சலசலப்பு ஏற்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்