சரமாரியாக கேள்வி கேட்ட ஆணையர்... பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிய அதிகாரிகள்
மதுரையில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் மாநகராட்சி ஆணையர் சரமாரி கேள்விகளை எழுப்பினார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது மண்டல அதிகாரிகள் சரிவர விளக்கம் அளிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து, பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென எச்சரித்தார்.
Next Story
