பணி முடிந்து திரும்பிய கலெக்டர்...திடீரென மோத வந்த கார் வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

x

பணி முடிந்து திரும்பிய கலெக்டர்...திடீரென மோத வந்த கார்

வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

வேலூரில் மாவட்ட ஆட்சியரின் காரை இடிப்பது போல் வந்த மற்றொரு காரால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பணியை முடித்துவிட்டு ஆட்சியர் பங்களா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் ஆட்சியரின் காரை இடிப்பது போல் வந்தது. இதனை சுதாரித்து கொண்ட ஆட்சியரின் ஓட்டுநர், காரை உடனடியாக நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், எதிரே வந்த காரை ஓட்டிய நபரை ஆட்சியரின் காவலாளி பிடித்து, காவல்துறையில் ஒப்படைத்தார். அந்த காரில் மொத்தமாக 4 இளைஞர்கள் மதுபோதையில் வந்ததும், 3 பேர் தப்பியோடியதும் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்