விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை : இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் முதல்வர்
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை : இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் முதல்வர்
2 நாள் பயணமாக இன்று திருவண்ணாமலை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதையொட்டி அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார். இன்று முற்பகல் 11 மணிக்கு கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ஆரஞ்ஜி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் அவர், சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகளை வழங்கவுள்ளார். பின்னர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெண்கல சிலை மற்றும் அண்ணா நுழைவாயில் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
மறுநாள் சனிக்கிழமை காலையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்து வைக்கும் முதலமைச்சர், அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி, திருவண்ணாமலையில் மூவாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்