காவிரி விவகாரம்... "உங்களுக்கும் சேர்த்து தான் இது..."விவசாயி - போலீஸ் இடையே கடும் தள்ளுமுள்ளு
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் கர்நாடக அரசை கண்டித்து, விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை, போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரயில் மறியல் செய்ய முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன், தமிழகத்திற்குரிய காவிரி நீரின் பங்கையே கர்நாடக அரசு தர மறுப்பதாக குற்றம்சாட்டினார்.
Next Story
