சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து... நடு வழியில் உடைந்து விழுந்த ஸ்டிரியங் பாக்ஸ்

x

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து... நடு வழியில் உடைந்து விழுந்த ஸ்டிரியங் பாக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் ஸ்டிரியங் பாக்ஸ் (STEERING BOX) உடைந்து விழுந்த‌தால்

பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தின் ஸ்டிரியங் பாக்ஸ் திடீரென உடைந்து

சாலையில் விழுந்த‌து. இதனால் பேருந்து நிலைதடுமாறி அருகில் உள்ள குறுகிய பாலத்தில் நடுவில் நின்றது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள்

சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை சரி செய்ய முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும், சரி செய்ய முடியாத‌தால், மாற்றுப்பேருந்து மூலம் பழுதான

பேருந்தை பணிமனைக்கு இழுத்துச்சென்றனர்.Next Story

மேலும் செய்திகள்