திடீரென இடிந்து விழுந்த பாலம்... 3 மாநில வாகனகள் செல்ல தடை..! நீலகிரியில் அதிகாரிகள் அதிரடி

x

கூடலூர் அருகே, மேல்கூடலூர் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்காக, பழைய பாலம் அருகே குழிதோண்டி கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், மழை காரணமாக அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், பழைய பாலம் இடிந்து சேதமடைந்துள்ளதால், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளை வரை சிறிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த 3 நாட்களுக்கு ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நிறுத்தி, பாலத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கேரளா, கர்நாடகாவில் இருந்து நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்