நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சிறுவன்.. நண்பன் கண்முன்னே உயிர் போன சோகம் -கதறி துடிக்கும் பெற்றோர்
நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சிறுவன்... நண்பன் கண்முன்னே உயிர் போன சோகம் - கதறி துடிக்கும் பெற்றோர் - விருதுநகரில் பயங்கரம்
விருதுநகர், இளங்கோவன் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், அருகில் உள்ள தனியார் கல்லூரியின் நீச்சல் குளத்திற்கு நண்பருடன் சேர்ந்து குளிக்க சென்றுள்ளார். ஞாயிற்று கிழமை என்பதால் நீச்சல் குளத்தில் ஏராளமானோர் குளித்து கொண்டிருந்த நிலையில், அருண்குமார் எதிர்பாரதாவிதமாக நீச்சல் குளத்தின் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளித்துள்ளார். ஒரு கட்டத்தில் நீரினுள் மூழ்கிய மாணவர், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.