சிகிச்சைக்கு வந்த இளைஞர் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் சமாதி.. பிரபல டாக்டர் பகீர் காரியம்

x

கும்பகோணம் அருகே சோழபுரத்தை சேர்ந்த சித்த மருத்துவர் எனக்கூறப்படும் கேசவமூர்த்தி என்பவர், மகாராஜபுரத்தை சேர்ந்த அசோக் ராஜ் என்ற இளைஞருக்கு வைத்தியம் பார்த்து வீட்டில் வைத்து மருந்து கொடுத்துள்ளார். அதில் மயக்கமடைந்த அசோக்ராஜ் பின்னர் இறந்தார். இதையடுத்து, அசோக்ராஜை வீட்டிலேயே கட்டர் மெஷினால் வெட்டி, தலையை கொல்லைபுறத்திலும், உடலை வீட்டின் அருகிலுள்ள பகுதியிலும் கேசவமூர்த்தி புதைத்துள்ளார். இதுதொடர்பாக கேசவமூர்த்தியை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். கொத்தனார் வேலையில் கைதேர்ந்த கேசவமூர்த்தி, சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, சித்த மருத்துவருடன் பழக்கமாகி, அவரிடம் மருத்துவம் பயின்று, பின்னர் கொத்தனார் வேலையை விட்டுவிட்டு சித்த மருத்துவரானது தெரியவந்துள்ளது. கேசவமூர்த்திக்கு வேறு சில குற்றச் சம்பவங்களிலும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்