"திருச்சியில் சட்டப்படி நடவடிக்கை வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு
திருச்சி மாநகர் பாரதியார் சாலையில் மாநகராட்சி கட்டிட அனுமதி இன்றி கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும்
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
என்றும் நவுசாத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்
மனு தாக்கல் செய்தார்.
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த குறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் வரும் 18-ந்தேதி
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டு
இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Next Story