"பருவமழையை எதிர்கொள்ள பணிகள் தீவிரம்" - தலைமைச் செயலாளர் பேட்டி

x

சென்னை மாநகராட்சி உட்புறப் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நூறு சதவீதம் முடிவடையும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. தியாகராய நகரில் நடைபெற்று வரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்து செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்