களைகட்டிய "தங்க மீன் விடும்" நிகழ்ச்சி.. பம்பை முழங்க தாண்டவமாடிய சிவனடியார்கள்
களைகட்டிய "தங்க மீன் விடும்" நிகழ்ச்சி.. பம்பை முழங்க தாண்டவமாடிய சிவனடியார்கள்
நாகையில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது...
மொத்தமுள்ள 63 நாயன்மார்களில் மீனவ குளத்தில் பிறந்த அதிபக்த நாயன்மார் நாகை மாவட்டம் நம்பியார் நகரில் பிறந்தார். இவர் சிவபெருமான் மீதிருந்த அதீத பக்தியால் எப்போதுமே தான் பிடிக்கும் மீனில்
முதல் மீனை சாமிக்காக கடலில் விடுவார். இவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபக்தநாயனார் வீசிய வலையில் தங்க மீனை விழச் செய்தார்... ஆனால் அதிபக்த நாயன்மார்
சாமியை வேண்டிக் கொண்டு அந்த தங்க மீனையும் சிவனுக்காகவே கடலில் விட்டு விட்டார். இவரது பக்தியைக் கண்டு மெச்சிய சிவன் அதிபக்த நாயன்மாருக்கு நேரில் காட்சியளித்தார். இதைக் கொண்டாடும்
விதமாக நம்பியார் நகரில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக புதிய ஒளி மாரியம்மன் கோயிலில் இருந்து பூசைகள் செய்யப்பட்ட தங்கமீன் மற்றும் அதிபக்த நாயனாரின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அப்போது சிவனடியார்கள் பம்பை மேளம்
முழங்க பத்தி பரவசத்துடன் தாண்டவமாடினர்.
