டேக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்..! Ola,Uber கட்டணம் அதிரடி உயர்வு.. கடும் அவதியில் சென்னை மக்கள்

x

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு,பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஓலா, ஊபர் வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, ஊபர் செயலியில் இருந்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஓட்டுனர்கள் வெளியேறினர். குறைந்தபட்ச ஓட்டுநர்களே ஓலா, ஊபர் செயலியை பயன்படுத்தி வாகன சேவை அளித்து வரும் நிலையில் அதன் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அலுவலக ஊழியர்கள், சொந்த வேலை காரணமாக வெளியெ செல்பவர்கள் கடும் அவதியுற்றனர். அதிக கட்டணம் செலுத்த தயாராக இருந்தாலும் வாடகைக்கு வாகனம் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினர்


Next Story

மேலும் செய்திகள்