தமிழகம் முழுவதும்... - கல்வித் துறை வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில், 20 ஆயிரத்து 332 பள்ளிகளில், இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் 8 ஆயிரத்து 180 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், 519 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில்
அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 22 ஆயிரத்து 931 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், 45 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 46 லட்சத்து 12 ஆயிரத்து 742 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. 6 ஆயிரத்து 23 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் 5 ஆயிரத்து 913 பள்ளிகளில் இணைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 992 நடுநிலைப் பள்ளிகளில், 3 ஆயிரத்து 799 பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மீதம் உள்ள 17 ஆயிரத்து 221 பள்ளிகளிலும் விரைவாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளது.
