இடி, மின்னலுடன் வானை பிளந்து கொட்டிய திடீர் மழை - ஒரு மணி நேரத்தில் தலைகீழாய் மாறிய வானிலை
தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கந்தகவுண்டனூர், தென்கரை கோட்டை, சிந்தல்பாடி , பில்பருத்தி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து. இருப்பினும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
